அக்காச்சிக்கு ஆசையா நான் எழுதும் இறுதியுரை

அக்காச்சிக்கு ஆசையா நான் எழுதும் இறுதியுரை

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன் கணீர் பூசல் தரும்”. என்றான் வள்ளுவன்.  அன்பை அடைத்து வைக்க முடியாது, எமக்குப் பிடித்தவர்கள் துன்பம் உறும் வேளை, எங்கள் கண்களில் வழியும் கண்ணீர் அந்த அன்பைக் காட்டிக் கொடுக்கும் என்கிறார் திரு வள்ளுவர். அது எந்த அளவு உண்மை என்பதற்கு … இங்கே கண்ணீரோடு திரண்டு நிற்க்கும் இந்த மக்கள் கூட்டமே சாட்சி.

கலைகள், ,அரவணைப்பு, திட்டமிடல், என்று அனைவரையும் அன்பாக ஆளுமையோடு வழி நடத்திச் செல்வார்  கவிதா அக்கா. அது அனைவரும் அறிந்த விடையம். உங்களுகு தெரியாத சில விடையங்களை இங்கே நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சிறுவயது ஞாபகங்கள்:

பலருக்கு சிறுவயதில் நடந்த பல சம்பவங்கள் நினைவில் இருக்காது. ஆனால் என்னவோ தெரியவில்லை. சுமார் 3 வயதில் நடந்த சில முக்கிய சம்பவங்கள் கூட எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. 1967ம் ஆண்டு, யாழ்  Clock Tower Road கவிதா அக்கா பிறந்தார். அவர் பிறந்தவேளைகளில், விமலா அன்ரி எங்கள் அம்மாவுடன் கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். விமலா அன்ரி .   நான் இந்த இடத்தில் அவரை நினைவுகூராமல் கடந்து  செல்ல முடியாது.

1979ம் ஆண்டு அப்பா யாழ் நாவலர் வீதியில் புது வீடு ஒன்றைக் கட்டினார். அப்போது எனக்கு 9 வயது கவி அக்காவுக்கு 12வயது. வீட்டில் 6 அடி உயரத்தில் ஒரு முருகன் சிலை வைக்கவேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டு, இந்தியாவில் இருந்து சிற்பியை கூட்டிவந்து இருந்தார். அவர் முருகன் சிலையை செய்துவிட்டு, சீமேண்டை பாவித்து ஒரு முத்துமாலை செய்து கொண்டு இருந்தார். அவர் மணி மணியாக உருட்டிவைத்திருந்த சிமெண்டை, நானும் கவி அக்காவும் பின்னல் சென்று நசிப்பது வழக்கம். அதனை மீண்டும் மீண்டும் உடைப்பதும், இதனால் அந்த மனிதர் அளவுக்கு அதிகமாக கோபம் அடைவதை பார்த்து ரசிப்பதும் எமக்கு வேடிக்கையாக இருந்தது.

மற்றுமொரு தருணம் கவி அக்கா, 9 வயதாக இருந்த சமயம், திடீரென அவரை வீட்டில் காணவில்லை. இதனால் அப்பா அம்மா, எல்லாருமே அவரை தேட ஆரம்பித்தோம். ஆனால் அவர் வீட்டில் இல்லை. வீட்டுக்கு வெளியே சென்று தேடலாம் என்று வெளியே வாசலுக்கு வந்தால், கை நிறைய கடலை மிட்டாயோடு அவர் வந்துகொண்டு இருந்தார். வாய், நாக்கு உதடுகள் எல்லாமே கடும் சிவப்பு நிறம். முதலில் நாம் எல்லாருமே சற்று பயந்து விட்டோம். கடலை மிட்டாயில் பூசப்பட்ட சாயம் அது. எங்களைக் கண்டதும் கவி அக்கா திகைத்து விட்டார். அந்த தருணத்தை மறக்கவே முடியாது.  கவி அக்காவின் சின்னச் சின்னக் குறும்புகள் எண்ணில் அடங்காதவை.

Grease Man Myth

இங்கே உள்ள இளைய சமுதாயங்களுக்கு யாழில் நடந்த சம்பவங்கள் தெரியாது. அந்தக் காலத்தில் , கிரீஸ் மனிதன் என்ற பெரும் பதற்றம், ஒன்று இருந்தது,. ஒரு மர்ம மனிதன் உலா வருவதாகவும், அவர் உடல் முழுவது கிரீஸ் தடி இருப்பார். அவரைப் பிடிக்க முடியாது. மேலும் அவர் உடலில், பின் ஷார்பான பின்கள் உள்ளது அவரைப் பிடிக்க முற்பட்டால், கைகளில் அந்த ஊசிகள் குத்தும் என்ற வதந்தி, நானும் கவி அக்கா மற்றும் சோபனா அக்கா, தனியாக வீட்டில் இருக்கும் நேரங்களில், எல்லாம்,  நாங்கள் தான் பயம் கொள்வோம். ஆனால் கவி அக்கா, அப்படி ஒன்றும் இருக்க முடியாது. அதுக்கு சாத்தியமே இல்லை என்று கூறுவார். இது ஒரு கட்டுக் கதை என்றும் கூறுவார். யாழ் நகரே பயத்தில் இருக்கும் அந்த இரவு வேளை கூட,  சைக்கிளை எடுத்துக்கொண்டு மீரா அக்கா வீட்டுக்குச் சென்றுவிடுவார் கவி அக்கா. அப்படியான அசாதாரண துணிச்சல் படைத்தவர் கவி அக்கா.

1990 களில் யாழ் அன்ன சத்திர ஒழுங்கையில், விடுதலைப் புலிகளின் மருத்து முகாம் ஒன்று அமைந்திருந்தது. கோட்டையில் இடம்பெற்ற சண்டையில் காயம் அடைந்த புலிகள் உறுப்பினர்களை அங்கே தான் கொண்டு வருவார்கள். அந்த வேளைகளில் எல்லாம், அம்மாவிடம் சொல்லி சூப் மற்றும் உணவு வகைகளை கொண்டு சென்று நானும் அக்காவும் கொடுப்பது வழக்கம். அன்று தொட்டு இன்றுவரை அவர் விடுதலைப் புலிகள் இயக்க, அபிமானியாகவே இருந்து வந்துள்ளார். ,  சமாதான காலகட்டத்தில் தமிழ்ச் செல்வன் அண்ணா அடிக்கடி பேர்கன் வருவது வழக்கம். அப்பொழுது தமிழ்ச் செல்வன் அண்ணாவின் குழுவில் உள்ள அனைவருக்கும் அவர் அவருக்கு பிடித்த உணவை சமைத்து பரிமாறுவார் கவிதா அக்கா.

ஆளுமை:

1965 களில் அப்பா , சென்னை சென்று தரமணி பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற பின்னர் யாழ் வந்து கொழும்புஸ் டூடியோவை, நிறுவி இருந்தார். 1990 களில், எல்லாம் யாழில் யாராவது cஒலொஉர் புகைப்படம் எடுத்தால், அதனை பிரின்ட் போட முடியாது. அதனை பிள்ளையான் என்று அழைக்கப்படும் பஸ்சில் கொழும்ப்புக்கு அனுப்ப வேண்டும். கொழும்பில் தான் பிரின் போட்டு அது யாழ்ப்பாணம் திரும்ப்ப வரும். அப்படி வரும் வேளைகளில் சிங்களவர்கள் சில வேளைகளில் பஸ்ஸை அடித்து நொருக்குவார்கள், தீ வைப்பார்கள், படங்களும் சேர்ந்து கருகிப் போகும்.

இதனால் எனது அப்பா யாழில், கலர் புகைப்படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். தான் இந்தியாவில் வருடக் கணக்கில் கற்ற விடையங்களை கவி அக்காவுக்கு சொல்ல, அவர் சில நாட்களிலேயே புகைப்படங்களை தயாரிக்க கற்றுக் கொண்டார். இதில் மிக முக்கியமானதொன்று, கலர் கரெக்ஷன். இதனைச் செய்வது என்பது மிகவும் சவாலான விடையம்.,  மஞ்சல் , நீலம் சிவப்பு, இந்த 3 நிறங்களைப் பாவித்து, கூட்டிக் குறைத்து, கலர் புகைப்படத்தை தயாரிக்க வேண்டும். இதுபோல மிகவும் நுணுக்கமான வேலைகள் கவி அக்கா, மிகவும் திறம்படச் செய்வார். மேலும் அவருக்கு புளொக் செய்யவும் தெரியும். கறுப்பு வெளை படங்கள் பிரின்ட் போடவும் தெரியும். சல்பூரிக் அசிட், நைரிக் அசிட் என்று பல அசிட் வகைகளை பாவிப்பது வழக்கம். இதனால் கவி அக்கா மற்றும் அப்பாவின் கைகள் நிறம் மாறி கறுப்பாக இருக்கும். அந்த அளவு வாழ்கையில் கஷ்டப்பட்டு தான், அவர்கள்  முன்னேறினார்

கலை

கவி அக்கா. சிறு வயது முதல் கலைகளில் ஆர்வம் கொண்டு இருந்ததால், அவர் யாழில் உள்ள லீலா நாராயணன் மிஸ் இடம் முதன் முதலாக பரதக் கலையை பயில ஆரம்பித்தார். பின்னர் நளினி அரஸரட்னம் மிஸ் இடமும் பரதக் கலை பயின்றார். அதன் பின்னரே அவர் சென்னை அடையார் சென்று , அடையார் மியூஸ் அக்கடமியில் முதுகலைப் பட்டம் பெற்றார். அங்கே நடிகர் சாய் குமார் அவர்களின் தங்கை, பிரியா கார்த்திகேயன் , அவர்களிடமும் நடனக் கலை பயின்றார்.

1980களில், தமிழக முதல்வராக இருந்த, MGR அவர்கள், சென்னை மியூசிக் அக்கடமிக்கு வந்தவேளை, கவியக்கா அடங்கிய 6 பேர் , நடனம் ஆடி அவரை வரவேற்றவேளை, தமிழக முதல்வரின் பாராட்டை அந்த நாட்களிலேயே பெற்றவர் கவி அக்கா. அவருடன் நானும் இருந்ததால், முதல்வர் எம்.ஜி.அரை அருகில் இருந்து பார்க்கும் சந்தர்பம் எனக்கும் கிடைத்தது.

இடம் பொருள்;

1968 கவி அக்காவுக்கு 1 வயது ஆகிவிட்டது. அப்பா Colomboல் இருந்து சிராக்ஸ் (பேப்பர் கொப்பியர்) மெஷினைக் கொண்டு வந்து யாழ்ப்பாணத்தில் , அதனை பொருத்தி பார்த்தவேளை, துரதிஷ்ட வசமாக எலட்ரிக் ஷாக்கில் சிக்கிக் கொண்டார். அம்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, கத்திச் கூச்சல் போட்டார் …அம்மா சத்தம் போட்ட சில சொக்கனில் வீதியில் சென்றுகொண்டு இருந்த இனம் தெரியாத நபர் ஒருவர், ஓடி வந்து அம்மாவிடம் Main Switch எங்கே என்று கேட்டு, சில செக்கனில் எல்லாம் அதனை OFF செய்துவிட்டார்.

அன்று அந்த இனம் தெரியாத மனிதர் உதவி செய்யவில்லை என்றால், நான் பிறதே இருக்க மாட்டேன்.. அந்த நபர் யார் என்று இன்றுவரை யாருக்குமே தெரியாது. தெய்வம் வரும் நேரில் என்பார்கள், அது போலவே எமது வாழ்விலும் சில தெய்வங்கள் வருவார்கள்… அந்த வகையில் எமக்கு கிடைத்த வரம் தான் கவி அக்கா.  சிவகனேஷன் கவிதா அக்கா திருமணம் கொழும்பில் நடைபெற்ற வேளை, அங்கே செல்ல முடியாமல் லண்டனில் நான் சிக்கித் தவித்த நாட்கள் நினைவில் இருக்கிறது.

நான் திருமணம் முடித்தால், குறைந்தது 4 அல்லது 5 பிள்ளைகள் பெறவேண்டும், எனது குடும்பம் பெரிய குடும்பமாக இருக்க வேண்டும் என்று கவி அக்கா அடிக்கடி கூறுவார். அவர் நினைத்தது போலவே, அழகான குடும்பம், அவருக்கு அமைந்தது. 4 அருமையான பிள்ளைகள், அவர்களை மிகவும் நேர்த்தியாக வளர்த்து, ஆளாக்கியுள்ளார் கவி அக்கா.. அவர்கள் 4 பேரும் என்னை கண்ணன் மாமா என்று அழைப்பதில், எனக்கு மிகவும் பெருமை தான். மேலும் கவி அக்காவுக்கு கிடைத்த அதிஷடம் அத்தானின் குடும்பத்தார். அவர்கள் கவிதா அக்காவை ஒரு போதும் அண்ணியாகவோ தமது சகோதரரின் மனைவியாக பார்பதே இல்லை. தங்கள் குடும்ப உறுப்பிர்கள் போல, .. ஒரு ரத்த சொந்தம் போலவே, பார்த்தும் பழகியும் வந்தார்கள்.

“”நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்” என்பார்கள், நல்ல குடும்பத்தில் பிறப்பதும், வாழ்வதும் பல்கலைக் கழகத்திற்கு சென்று கற்றுக் கொள்ள முடியாத கல்வியை உங்களுக்கு கற்றுத் தரும் என்பார்கள் பெரியவர்கள்.  அதனையே நான் இங்கே பார்கிறேன்.

கவிதா அக்கா எங்களை விட்டுப் பிரியவில்லை. அப்படி நான் நினைக்கவும் இல்லை. சைவர்கள் ஆகிய நாங்கள் மறு பிறப்பில் நம்பிக்கை உடையவர்கள், எனவே நாளை, ஷாமளி, மாளவி, சாரங்கன், அல்லது வருணவி யாரோ ஒருவரது பிள்ளையாக கவி மீண்டும் தோன்றுவார்,  ஓ….அப்படியே கவி அக்கா போல இருக்கிறார் என்று நாமும் சீராட்டும் நாள் வெகு  தொலைவில் இல்லை என்று கூறி, விடைபெறுகிறேன், இந்த தருணத்தில் கஷ்டமான கால கட்டங்களில் எமக்கு உதவிய அனைத்து நண்பர்கள் உறவினர்கள் கரங்களையும் நான் பாசத்தோடு பற்றி நிற்கிறோன். அக்கா குடும்பம் சார்பாக நான் இங்கே நன்றியையும் தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன். மேலும் நெஞ்சில் வலி சுமந்து, வேறு நாடுகளில் இருந்து, நோர்வேயில் வேறு மாநிலங்களில் இருந்து,  கவி அக்காவின் இறுத்திக் கிரிகைகளுக்கு, இன்று வந்து கலந்துகொண்ட உறவுகள், நண்பர்கள், மற்றும் மாணவ மாணவிகளின் கரங்களை நான் நன்றி உணர்வோடு பற்றி நிற்கிறேன். நன்றி வணக்கம்,

கண்ணன்

ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி…

நன்றி  வணக்கம்